Wednesday, January 15, 2020

வள்ளுவர் தமிழரே யாவார்.



 பேராசிரியர். கலியபெருமாள் ஆறுமுகம்

  இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு) (1966-2001)

                  அறிவுரை தாங்கிய குறள் தமிழில் வெளியிடப்பட்ட முதன் நூலாகியதால் வள்ளுவர் தமிழரே யாவார். தொல்காப்பியம் தமிழ் இலக்கியத்தின் வெண்பாவிற்கு நான்கு அடிகளை வகுத்த இலக்கணத்தினின்றும் வழுவி தன் நூலின் பொருளை மக்கள் எளிதில் புரிந்து (போற்றி) தழுவுதல் (தொழுதல்) வேண்டும் என்ற அவாவில் ஈரடிகளில் குறுக்கிய பாக்களுக்கு குறட்பாவென தன் நூலுக்கு பெயரிட்டிருப்பதால் வள்ளுவர் தமிழர் என்பது உறுதியாகும். குழுமமாக கூடிவாழ்ந்த தமிழ்க் குடியை உலகு என்று ஆகுபெயரில் முதற்பாவில் அறிமுகப்படுத்துவதும் அல்லாமல் அவர்கள் தம்மிடையே தொடர்புகொள்ள வளர்த்த தமிழ் மொழியின் தொடக்க எழுத்தாகிய அகரத்தையும் முதற்பாவில் குறிப்பிடுவதால் வள்ளுவர் மக்கள் குழுமத்தின் வாழ்வியலை அக்குநூறாக அலசி அராய்ந்து நல வாழ்விற்குகந்த அறவழியை கற்பிக்கும் தமிழின ஆசானாவார்.
வாழ்வியலை நுண்மையாக பகுத்தாராய்ந்த வள்ளுவர் பகலனின் (பகல்+அன்) ஓளி மற்றும் வெட்பதட்பங்களை முதற்றாக கொண்டே மக்கட் சமுதாயம் தோற்றுவிக்கப்பட்டதை முதற் குறளில் குறிப்பிட்டிருக்கக் கூடும். அதனாற்றான், மக்கள் உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாத அமிழ்தான மழையின் நன்னீரை வான் சிறப்பாக இரண்டாவது அதிகாரத்தில் தொடர்ந்து அமைத்துள்ளார். பகலினின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாதலால் கடல் தன் நீர்மை குறைந்து தடிந்தெழும் (நீர்த்துளிகள் அடர்ந்து கருத்த) எழிலியென நன்னீரை மழையாக நல்கும் முகிற் கூட்டத்தை சிறந்த அறிவறிவராக (scientist) குறிப்பிடுவார். ஐம்புலன்களின் ஆற்றல்களால்தான் உலக வாழ்வியலை உணரமுடியும் என்ற மெய்மையையும், இனிதே வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நற்பண்புகளை சிறப்பித்து ஒழுகும் அறவழி மந்திரங்களெனவும் இயற்கை நாகரீகத்தை பாயிரவியலில் (முன்னுரை) அறிவுறுத்துவார்.
முதல் அதிகாரத்தின் முதற் குறளில் தமிழ்க் குமுகாயத்தை அறிமுகப்படுத்தும் வள்ளுவர் அடுத்த ஒன்பது பாக்களில் சமுதாய வாழ்க்கை இனிதாவதற்கு நல்வழிகளை (அறவழிகளை) உள்ளாய்ந்துணர்ந்து தீயவைகளின் வித்தாகிய பேராவாவை ஐம்புலன்களின் ஆற்றல்களில் அடக்கிய மக்களில் சிலரை உள்ளத்தை அடக்கிய கடவுளரென போற்றி மற்றவர்கள் அவர் தம் வழித்தடங்களை பின் பற்றுதலின் இன்றியமையாதலையும், மக்களின் தேவைகளை ஈட்டி பாதுகாத்து அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும நல்வினையாற்றும் சமுதாய தலைவனை மன்னவனென்றும் இறைவனென்றும் விளித்து அவனின் இறையாண்மையை புகழ்ந்து புரியும் இன்றியமையாதலையும் கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தில் வலியுறுத்துவார்.
மக்கள் குழுமத்தில் உள்ளாயும் திறன் பெற்ற சிலர் இப் பெருவெளியின் (Universe) இயல்பாகிய தொடரும் இயற்கை நிகழ்வுகளை கண்டு வியந்து காரணகாரியத்தை விளக்க முடியாத அறியாமையினால் (பெரியாரின் மொழியில் முட்டாள்தனத்தினால்) பெருவெளியின் தோற்றத்திற்கு காரணமாக எல்லாம் வல்லவனாக காணாத தெய்வத்தை கருவாகக் கொண்ட மதத்தை படைத்தனர். அவர்களின் வழிவந்தவர்கள் குறிப்பாக ஆரிய பிராமணர்கள் உழைப்பை வெறுக்கும் ஒட்டுண்ணிகளாக வாழத்தலைப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இயற்கை நிகழ்வுகளை தெய்வத்தின் செயல்களாகவும், உலக இன்ப வாழ்க்கையை மாயையாகவும், இறப்பிற்குப்பின் விண்ணில் தெய்வத்தின் வீடுபேற்றில் (சொர்க்கத்தில்) அழியா பேரின்பத்தில் திளைப்பதே மெய்யெனவும் மக்களை ஏமாற்றும் மேல் சாதிக்காரரர்களாக (பெரியாரின் மொழியில் அயோக்கியர்களாக) உருவாகினர். தமிழினத் தலைவர்களாகிய மூவேந்தர்ர்கள் முதல் தமிழ்க்குடிகள் வரை பிராமணர்களின் மாய ஆரியமதக் கருத்துக்களில் பேரவாக் கொண்டவர்களாக (பெரியாரின் மொழியில் காட்டுமிராண்டிகளாக) இயற்கை நாகரீகத்தை மறந்து கிணற்றுத் தவளைகளாக வாழத் தலைப்பட்டனர். தொடர்ந்து வாழ்ந்து வரும் (திருவள்ளுவரின் மொழியில்) பேதைகளாயினர்.
திருவள்ளுவர் மதக் கருவாகிய பேராற்றலை தெய்வமென்றும், ஐம்புலன்களையும் அடக்கிய சான்றோர்களை கடவுளரென்றும், சமுதாய்த்தலைவனான மன்னவனை இறைவனென்றும்தான் குறிப்பிடுவார். இயற்கை இடர்ப்பாடுகளில் தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவார். பிராமணர்களின் நச்சுக் கருத்துக்களில் முதற் குறளில் பகவன் என்ற வடமொழிச் சொல்லில் தெய்வத்தை உலகின் முதற்றாகவும், தொடரும் குறட்பாக்களில் சான்றோர்களாகிய கடவுளரையும், மன்னவன் என்ற இறைவனையும் தெய்வமென்றும் குறிப்பிடப்படும். பொருட்பால் குற்றம் கடிதல் அதிகாரத்தில் இறைவன் என்ற சொல்லை ம்ன்னவன் என்று இடத்திற்கு தக்கவாறு ஆரியர்களால் வழங்கப்படும்.

No comments:

Post a Comment