பேராசிரியர். கலியபெருமாள் ஆறுமுகம்
இயற்பியல் பேராசிரியர் (ஓய்வு) (1966-2001)
ஓம் நமசிவாய ஒலிப்பில் அறிவியல் தொடர்பான ஆற்றல் அடங்கியிருந்தால் வரலாறு அறிந்த ஈராயிரம் ஆண்டுகளாக தற்போது பயன்பாடிலுள்ள அறிவியல் கருவிகளை இதுநாள் வரை ஓங்கார ஒலியிலிருந்து ஏன் கண்டுபிடிக்கவில்லை? அறிவியல் ஆய்வு என்பது இயற்கையின் பண்புகளை முறையாக உள்ளாய்ந்து சரியென்று எடுத்த முடிவுகளை முறைமைகளாக (laws) உருவாக்கி செய்முறைகளில் பல் வேறிடத்திலும் பல்வேறு பொழுதிலும் அதே சூழ்நிலையில் தவறுகள் குறைக்கப்படும் முறைகளில் (trail and error) முறைமைகளை மெய்ப்பிக்கும் முடிவுகளை பெறுவதாகும்.